
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கிணறுகளில் பெட்ரோல், டீசல் கலந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மார்த்தாண்டம் அருகேயுள்ள கீழப்பம்பம் பகுதியில் வீடுகளில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இந்த கிணறுகளில் தற்போது பெட்ரோல் வாடை வீசி வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஜெகன் என்பவரின் கிணற்றில் இருந்து கிடைத்த தண்ணீரில் டீசல், பெட்ரோல் கலந்திருந்தது. அந்த தண்ணீரை பற்ற வைத்தபோது தீப்பற்றி எரிந்தது. அந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை மற்றும் பெட்ரோல் பங்குகள் செயல்பட்டு வருகின்றன.