• August 8, 2025
  • NewsEditor
  • 0

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ஆசிரியையாக பணிபுரியும் பிரெஞ்சு பெண் ஒருவர், இந்தியாவில் வாழ்வது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நைஜீரிய யூடியூபரான பாஸ்கல் ஒலாலேயின் நேர்காணலில், அந்த பெண் பேசியிருந்தார். அதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வருவதாகவும், பிரான்ஸை விட இந்தியாவில் தான் பாதுகாப்பாக உணர்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

india rajkot

பிரான்ஸை விட்டு இந்தியாவுக்கு வந்தேன்

அந்த வீடியோவில் அவர் பேசியதாவது “இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் முழுமையாக வாழ்ந்த பிறகு நல்லது, கெட்டது மற்றும் எதிர்பாராதவை உள்ளிட்ட அனைத்தையும் உணர்ந்துவிட்டேன்.

பிரான்ஸில் பொது இடங்களில் துன்புறுத்தல் பொதுவானது. ஆனால் இந்தியாவில் அத்தகைய அனுபவங்களை சந்திக்கவில்லை. பிரான்ஸில் உள்ளவர்கள் இந்தியா பாதுகாப்பற்றது என்று நினைக்கிறார்கள். ஆனால் நான் அப்படி உணரவில்லை.

பிரான்ஸில் வீதியில் யாராவது உங்களை நிறுத்தி உங்கள் பையை கேட்கலாம் அல்லது பறிக்க முயற்சிக்கலாம். இந்தியாவில் அப்படியொரு அனுபவம் எனக்கு ஏற்படவில்லை.

இந்தியாவில் அதிகாலை 3 மணிக்கு தனியாக நடந்தபோதும் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை. ஒரு பெண்ணாக, இந்தியாவில் அதிகாலை 3 மணிக்கு தனியாக நடந்தேன், எந்த பிரச்சனையும் இல்லை. பொது இடங்களில் துன்புறுத்தலில் இருந்து இந்தியாவில் பாதுகாப்பாக உணர்கிறேன்” என்று பிரெஞ்சு பெண் அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தான் இணையவாசிகளிடையே கவனம் பெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *