
பெங்களூரு: 2024 மக்களவைத் தேர்தலின் போது நடந்ததாக கூறப்படும் ‘வாக்கு திருட்டை’ கண்டித்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் இன்று பேரணி நடத்தப்படுகிறது. மேலும், காங்கிரஸார் பேரணியாக சென்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை மனுவை சமர்ப்பிக்கவுள்ளனர்.
"நமது வாக்கு, நமது உரிமை, நமது போராட்டம்" என்ற கோரிக்கையுடன் 'வாக்காளர் அதிகார பேரணி' இன்று பெங்களூரு ஃப்ரீடம் பார்க்கில் நடைபெறுகிறது. இப்பேரணியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார் மற்றும் பல அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.