
இந்தியா – பாகிஸ்தான் தாக்குதல் நிறுத்தத்திற்கு பிறகு, அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கு, ‘நோபல் பரிசு ஆசை’ ரொம்பவே வந்துவிட்டது என்று கூறலாம்.
பாகிஸ்தான் ஆரம்பித்த ஒன்று!
இந்தத் தீயை முதன்முதலில் பற்ற வைத்தவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் முனீர்.
அதன் பிறகு, வெள்ளை மாளிகையில் இருந்து அடிக்கடி, ‘ட்ரம்பிற்கு நோபல் பரிசு தர வேண்டும்’ என்கிற கோரிக்கை எழுந்துக்கொண்டே வருகிறது.
முதன்முதலில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளதாக கூறியிருந்தார்.
நெதன்யாகு
கடந்த மாதம், அமெரிக்கா சென்றிருந்த இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும், ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்ததாக அவர் முன்னே சொன்னார்.
மேலும், அவர் பரிந்துரைத்ததற்கான நகலையும் ட்ரம்பிற்கு பரிசாக அளித்தார்.
கம்போடியா பிரதமர்
இந்த வரிசையில், மூன்றாவதாக, கம்போடியாவின் பிரதமர் ஹன் மானெட்டும் ட்ரம்பை தற்போது நோபல் பரிசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
கடந்த மாதம் நடந்த கம்போடியா – தாய்லாந்து போரை நிறுத்தியதற்காக, ட்ரம்பை நோபல் பரிசுக்கு பரிந்துரைத்திருப்பதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், அந்தப் பரிந்துரைக்கான கடிதத்தின் புகைப்படத்தையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இந்தப் பரிந்துரைகள் ட்ரம்ப் கைகளில் நோபல் பரிசைச் சேர்க்குமா?