• August 8, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: மத்​திய அரசின் தொழிலா​ளர் மற்​றும் வேலை​வாய்ப்பு அமைச்​சகம் சார்​பில் புதிய வேலை​வாய்ப்​பு​களை உருவாக்குவதற்​காக, வேலை​வாய்ப்​புடன் இணைந்து ஊக்​கத்​தொகை வழங்​கும் வகை​யில், பிரதமரின் வளர்ச்​சி​யடைந்த பாரதத்துக்​கான வேலை​வாய்ப்​புத் திட்​டம் அறி​முகப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இத்​திட்​டம் குறித்து விழிப்​புணர்வு ஏற்​படுத்​தும் நிகழ்ச்சி, தமிழகம் மற்​றும் புதுச்​சேரி துணை முதன்மை தொழிலா​ளர் ஆணை​யர் அலு​வல​கம் சார்​பில் சென்னை ஐசிஎஃப் தொழிற்​சாலை​யில் நேற்று நடை​பெற்​றது.

இதுகுறித்து, செய்​தி​யாளர்​களிடம் மத்​திய துணை முதன்மை தொழிலா​ளர் ஆணை​யர் நு​தாரா கூறிய​தாவது: உற்​பத்தி தொழில் உட்பட பல்​வேறு துறை​களில் 3.5 கோடி வேலை​வாய்ப்​பு​களை 2027 ஜூலை மாதத்​துக்​குள் உரு​வாக்​கு​வதற்​காக, ரூ.99,446 கோடி மதிப்​பீட்டில், பிரதமரின் வளர்ச்​சி​யடைந்த பாரதத்​துக்கான வேலை​வாய்ப்​புத் திட்​டம் அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. இதன்​மூலம், வேலை வழங்​கும் நிர்​வாக​மும், முதன்​முதலாக வேலைபெறு​பவர்​களும் ஊக்​கத்​தொகை பெறு​வார்​கள்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *