• August 8, 2025
  • NewsEditor
  • 0

பாட்னா: பிஹாரில் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை முன்னிட்டு வாக்​காளர் அட்​டையை சரி​பார்ப்​ப​தற்கு இருப்​பிட சான்​றிதழ் கட்​டாய​ம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்​து, மாநிலம் முழு​வதும் இணைய வழி​யில் இருப்​பிட சான்​றிதழ் கோரி விண்​ணப்​பித்​து வருகின்றனர். அந்த வகை​யில், பாட்​னா​வில் பாபு என்ற பெயரில் ஒரு நாய் புகைப்​படத்​துடன் இருப்​பிட சான்​றிதழ் வழங்​கப்​பட்​டது.

பின்னர், அந்த சான்​றிதழ் ரத்து செய்​யப்​பட்​டது. மேலும், விண்​ணப்​பித்​தவர், சான்​றிதழ் வழங்​கிய அதி​காரி மீது வழக்கு பதிவு செய்​யப்​பட்​டது. இந்த சூழ்​நிலை​யில், சமஸ்​திபூர் மாவட்​டத்​தில் டொனால்டு ஜான் ட்ரம்ப் என்​பவர் இருப்​பிடச் சான்​றிதழ் கோரி விண்​ணப்​பித்​திருந்​தார். ஜூலை 29-ம் தேதி​யிட்ட அந்த விண்​ணப்​பத்​தில் தந்தை பெயர் பிரடெரிக் கிறிஸ்ட் ட்ரம்ப் என்று குறிப்​பிடப்​பட்​டிருந்​தது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *