
சென்னை: திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி, 2018-ம் ஆண்டு ஆக.7-ம் தேதி காலமானார். அவரது 7-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.அதையொட்டி, திமுக சென்னை மாவட்டக் குழுக்கள் சார்பில் அண்ணா சாலையில் நேற்று அமைதிப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின், பேரணிக்கு தலைமை வகித்தார்.
முன்னதாக அண்ணாசாலை ஓமந்தூரார் வளாகத்தில் கருணாநிதி சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதைத்தொடர்ந்து, திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன், துணை பொதுச்செயலாளர் கனிமொழி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.