
பெங்களூரு: கன்னடத்தில் குறைந்த பட்ஜெட்டில் உருவான ‘சு ஃப்ரம் சோ’ திரைப்படம் நாடு முழுவதும் வசூல் சாதனை படைத்து வருகிறது.
அறிமுக இயக்குநர் ஜே.பி. துமிநாட் இயக்கத்தில் கடந்த ஜூலை 25 வெளியான படம் ‘சு ஃப்ரம் சோ’ (சுலோச்சனா ஃபிரம் சோமேஷ்வரா). பெரிய அளவில் எந்தவித விளம்பரமும் இல்லாமல் திரையரங்குகளில் இப்படம் வெளியானது. எனினும் ஓரிரு நாட்களிலேயே இப்படம் பற்றிய பாசிட்டிவ் விமர்சனங்கள் வாய்வழியாக காட்டுத் தீ போல பரவின.