
சிவகாசி / சாத்தூர்: தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதி என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நயினார் நாகேந்திரன் பேசியதாவது: வரும் 17-ம் தேதி நெல்லையில் நடைபெறும் மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகள் மாநாட்டில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகிய மூவரில், யாராவது ஒருவர் கலந்து கொள்வார்.