
தமிழில் விஜய்க்கு ஜோடியாக ‘மாஸ்டர்’, விக்ரமுடன் ‘தங்கலான்’ படங்களில் நடித்து கோலிவுட்டில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்.
தமிழில் அவ்வப்போது நடித்தாலும், மலையாளத் திரையுலகில் இப்போது முழு கவனம் செலுத்தி பிஸியாகியிருக்கிறார். சமீபத்தில் மலையாளத் திரையுலகின் ஜாம்பவான்களான நடிகர் மோகன் லால், இயக்குநர் சத்யன் அந்திகாட் இணைந்துள்ள ‘ஹிருதயப்பூர்வம்’ என்ற படத்தில் நடித்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
இந்நிலையில் ‘மாஸ்டர்’ படம் வெளியான சமயத்தில், வாழ்த்துவதற்காக ரஜினிகாந்த் போன் செய்தது குறித்து ‘Filmfare’ தளத்திற்குப் பேசியிருக்கும் நடிகை மாளவிகா மோகனன், “மாஸ்டர்’ ரிலீஸான 2 நாள்களுக்குப் பிறகு நிறைய போன் அழைப்புகள் எனக்கு வந்தன. அப்போது ரொம்ப பிஸியாக இருந்ததால் தெரிந்த நபர்களின் போன் அழைப்புகளை மட்டுமே எடுத்துப் பேசிக்கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில் ரஜினி சார் போன் செய்திருக்கிறார். ஆனால் அது தெரியாமல் எடுக்காமல் விட்டுவிட்டேன். ‘ஏன் சூப்பர் ஸ்டார் போன் அழைப்பை எடுக்கவில்லை’ என்று என்னுடைய உதவி மேலாளர் ஒருவர் கேட்ட பின்புதான் எனக்கு இந்த விஷயமே தெரியும்.
.jpg)
அதன்பிறகு சூப்பர் ஸ்டாருக்கு போன் பண்ணி பேசினேன். அப்போது, ‘மாஸ்டர் படத்தில் நீங்க ரொம்ப அழகா இருந்தீங்க. உங்க படம் அபார வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள்’ என வாழ்த்தினார். சினிமா துறையில் மொட்டாக வளர்ந்து வரும் என்னை சூப்பர் ஸ்டார் வாழ்த்தியதை என்னால் மறக்கமுடியாது” என்று பேசியிருக்கிறார்.
இப்போது ஆடியோ வடிவிலும் வந்துவிட்டான் `பறம்பின் நாயகன்’ பாரி; அறமும் வீரமும் நிறைந்த அவனின் கதையைக் கேட்டு மகிழுங்கள்!
https://tinyurl.com/Velpari-Vikatan-Play
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…