
கேரளாவின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் கேரளாவின் வளர்ச்சியைப் பற்றிய வீடியோக்களை எடுத்து வெளியிட திட்டமிட்டிருக்கிறது. இதற்காக ‘Vloggers, Youtubers, Instagram, Facebook’ உள்ளிட்ட சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறது கேரள அரசு.
இதில் பங்கேற்பதற்காக விண்ணப்பிக்க குறைந்தபட்சம் 3,00,000 ஃப்லோவர்ஸ், ஒட்டுமொத்தமாக 10 மில்லியன் பார்வைகளைக் கடந்த சேனல்கள், எந்தவொரு காவல்துறை புகார்களும், சர்சைகளும் இல்லாத நபராக இருக்க வேண்டும் என்று சில வழிகாட்டுதல்களை வெளியிட்டிருக்கிறது கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை.
கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை கட்டுப்பாடுகளின்படி தகுதி வாய்ந்த சமூக வலைதள இன்ஃப்ளூயன்சர்கள் இதற்கு விண்ணபிக்கலாம். இந்த விண்ணப்பத்திலேயே உங்களின் தரமான வீடியோக்கள், சமூக வலைதள பக்கங்களின் லிங்கையும் விண்ணப்பத்தில் சேர்க்க வேண்டியிருக்கும்.
தரமான ஐடியாக்கள், கைதேர்ந்து சிறப்பாக வீடியோ எடுப்பவர்களுக்கு முன்னிரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வீடியோக்கள் எடுக்கலாம். கேரள தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறை இணையதளம் மூலம் இந்த மாதம் ஆகஸ்ட் 13-ம் தேதிக்குள் இந்த விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் நல்ல வீடியோக்களுக்குப் பரிசும், அரசுடன் இணைந்து பணியாற்றவும் வாய்ப்புக் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/3OITqxs