
எல்லா கஷ்டங்களுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு பிரம்மஹத்தி பரிகார ஹோமம்! ஒரு மண்டலத்தில் பலன் நிச்சயம்! ஆகஸ்ட் -17 ஞாயிற்றுக் கிழமை அன்று கும்பகோணம் திப்பிராஜபுரத்தில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
நேரம்; காலம் சரியில்லை என்றால் மன்னாதி மன்னர்களையும் ஆட்டிவைத்து விடும் என்பார்கள். அப்படித்தான் ஜாதகப்படி கெட்டநேரம் தொடங்கிய வரகுண பாண்டியன், தெரியாமல் ஒரு அந்தணரைக் கொன்றுவிட அது பிரம்மஹத்தி தோஷமாகப் பிடித்துக் கொண்டு அவனை படாதபாடு படுத்திவிட்டது. ஒருவழியாக ஆன்மிகப் பெரியவர்கள் வழிகாட்ட திருவிடைமருதூருக்குச் சென்றான். அவனைப் பின்தொடர்ந்த பிரம்மஹத்தி தோஷமும் கூடவே சென்றது. கோயிலுக்குள் நுழைந்த அவனைப் பின்தொடர முடியாத தோஷம், அவனுக்காகக் காத்திருந்தது. சிவபூஜையும் பரிகார தோஷமும் செய்த பாண்டியன், சிவனின் ஆணைப்படி வேறு வழியாக மதுரை திரும்பினான். அவனுக்காகக் காத்திருந்த பிரம்மஹத்தி மறைந்துபோனது என்பார்கள்.
மன்னனுக்கே இந்த நிலையென்றால் சாமானிய நபர்களுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தால் என்னென்ன நடக்கும் தெரியுமா! எத்தனை பாடுபட்டாலும் வாழ்க்கையில் முன்னேற்றமே இருக்காது. தோல்வியும் அவமானமும் மட்டுமே மிஞ்சும். கவலை; கடன்; நோய்; விரயம்; வீண் பிரச்னைகள் என்றெல்லாம் ஒருவர் வாழ்க்கையே நரகமாக மாறிவிடும். இதையெல்லாம் மாற்றி உங்கள் வாழ்க்கையை நிம்மதியாக வெற்றியாக மாற்றவே இந்த பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடத்தப்படுகிறது.
சக்தி விகடன் வாசகர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி வரும் ஆகஸ்ட் -17 ஞாயிற்றுக் கிழமை அன்று பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது. அற்புதமான இந்த வழிபாட்டில் நீங்களும் சங்கல்ப பிரார்த்தனை செய்து கலந்துகொள்ளலாம். இறையருளால் சகல பிரச்னைகளும் நீங்கி, உங்கள் வாழ்க்கை வளமாகும். இந்த சிறப்பான ஹோம வைபவம் கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் நடைபெற உள்ளது.
கும்பகோணம், மன்னார்குடி சாலையில் வலங்கைமானுக்கு அருகே 7கி.மீ தொலைவில் அமைந்திருக்கிறது திப்பிராஜபுரம். விஜயநகர ஆட்சியில் அமைச்சராக இருந்த திப்பையா பெயரிலேயே திப்பிராஜபுரம் என்றானது என்கிறது வரலாறு. இங்குள்ள சோளேஸ்வரர் கோயில் விக்ரமச் சோழனால் அமைக்கப்பட்டது. விக்ரம சோழனைப் பிடித்திருந்த பிரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபட இந்த ஆலயம் உருவானது. தொடர் தோல்விகள், பஞ்சம் பசி, எதிரிகள் தொல்லை என துன்பப்பட்டு வந்த சோழனை இங்குள்ள ஈசனே காத்தருளினார் என்கிறது தலவரலாறு.

பிரம்மஹத்தி தோஷம் தீர்த்த இந்த புண்ணிய க்ஷேத்ரத்தில் கலியுக வரதராக எழுந்தருளி இருக்கிறார் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர். திருமாலின் அம்சத்தையும் தாங்கியுள்ள அபூர்வ சிவலிங்க வடிவமே ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர். சிவ வழிபாடுத் தொன்மையானது என்பதை மெய்ப்பிக்கும் வகையில் 3000 ஆண்டுகள் பழைமையான மூலவர் இவர் என்கிறார்கள். சுந்தரகுஜாம்பிகை, கோவலர்வல்லி என இரு அம்பிகைகளோடு சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். முக்குறுணி விநாயகரும் ஸ்ரீதண்டாயுதபாணியும் இங்கே அருள்கிறார்கள். மேலும் ஸ்ரீசிவகாமசுந்தரி ஸமேத ஸ்ரீஆனந்த நடராஜராஜ மூர்த்தி எழுந்தருளியுள்ளார். இந்த நடராஜர் சிதம்பரத்திலுள்ளது போல தாழ்சடையோடு, ஊம்மத்தம்பூ, கங்கை, சூடியபடி உள்ளார். மேலும் ஸ்ரீசந்திரமவுலீஸ்வரர் எனும் அபூர்வ ஸ்படிக லிங்கம் இங்கு உள்ளது இதற்கு தினந்தோறும் அபிஷேகம் நடைபெறுகிறது. அதைக் காண்பவரின் வேண்டுதல்கள் நிறைவேறுகிறது என்பதும் இக்கோயிலின் விசேஷம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07
ஹோமத்தில் கலந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யவும்.
இந்த ஆலயத்தின் நிர்வாகத்தைக் கவனித்து வரும் ஞானமூர்த்தி சிவகன்று ஸ்ரீகருணா அமுத சுவாமி அவர்கள் கருவிலேயே திரு படைத்த தவச்செல்வர். திருஞான சம்பந்தரைப் போல சிறுகுழந்தை முதலே பாடல்கள் புனையும் திருவருள் வாய்க்கப்பட்டவர். இவரின் அசாத்திய ஞானத்தைக் கண்ட குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் உள்ளிட்ட ஆன்மிகப் பெரியோர்கள் பலரும் இவரை ஆசிர்வதித்து பெருமை கொள்ளச் செய்திருக்கிறார்கள்.
இதுவரை 10,000 ஆன்மிகப் பாடல்களை இயற்றியுள்ள இந்த பால மகானின் மேற்பார்வையில் இந்த ஆலயத்தில் அன்பர்களின் குறைகளைத் தீர்க்கும் பிரம்மஹத்தி ஹோமம் நடைபெற உள்ளது. 2025 ஆகஸ்ட் 17-ம் நாள் ஞாயிற்றுக்கிழமை கும்பகோணம் திப்பிராஜபுரம் ஸ்ரீவைகுந்த காளத்தியப்பர் கோயிலில் பிரம்மஹத்தி பரிகார ஹோமம் நடைபெற உள்ளது.
நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் நீங்காத புகழும் நீடித்த ஆரோக்கியமும் பெற இந்த சிறப்பு பிரம்மஹத்தி பரிகார தோஷத்தில் கலந்து கொள்ளுங்கள். ஒரு மண்டல காலத்தில் தோஷ நிவர்த்தி பெற்று சிறப்பொடு வாழுங்கள்!

வாசகர்களின் கவனத்துக்கு!
இந்த ஹோம வழிபாட்டில் வாசகர்களே கர்த்தாக்கள் என்பதால், அவர்களின் பங்களிப்பும் அவசியம் எனும் அடிப்படையில், ஹோமத்துக்கான சங்கல்பக் கட்டணம் (ரூ.500/- மட்டும்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹோம சங்கல்பத்துக்கு முன்பதிவு செய்யும் வாசகர்களின் பிரார்த்தனைகள், ஹோம வழிபாட்டில் சமர்ப்பிக்கப்படும். அத்துடன், அவர்களுக்குப் பிரசாதமாக ஹோம பஸ்பம், ரட்சை மற்றும் குங்குமம் அனுப்பிவைக்கப்படும் (தமிழகம் – புதுவை பகுதிகளுக்கு மட்டும்). உங்கள் தெளிவான முகவரியை குறிப்பிடவும். அது பிரசாதம் சீக்கிரம் வந்தடைய உதவும். வாசகர்கள், இந்த வழிபாட்டு வைபவங்களை சக்தி விகடன் முகநூல் பக்கத்தில் வீடியோ வடிவில் தரிசிக்கலாம். https://www.facebook.com/SakthiVikatan
முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 044 – 6680 2980/07