
சென்னை: “இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழகம் என்பதும், இரட்டை இலக்க வளர்ச்சி பெற்ற ஒரே மாநிலம் தமிழகம் என்பதும் ஒரு மாய விளம்பரம்” என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். மேலும், ‘கர்நாடகா, தெலங்கானா போன்ற மாநிலங்களில் கூட தனிநபர் வருமானம் தமிழகத்தை விட கூடுதலாக உள்ளது’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “போட்டோஷூட் நடத்தி, பெயர் வைப்பதில் சாதனை புரிந்துவரும் திமுக அரசு, ‘இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி பெற்ற மாநிலம் தமிழ்நாடு’ என்று ஒரு புதிய புரளியைக் கிளப்பிவிட்டு விளம்பரம் தேடுகிறது. மக்களைப் பற்றி கவலைப்படாமல், மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யாமல், மக்களுக்கு வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் கொடுக்காமல் வெற்று விளம்பரம் செய்யும் திறனற்ற அரசு என்று திமுகவை தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறோம்.