
நவீன கர்ப்ப பரிசோதனை கருவிகள் கண்டுபிடிப்பதற்கு முன்பு இந்தியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் இயற்கை பொருட்கள் மற்றும் பாரம்பரிய நம்பிக்கைகளை பயன்படுத்தி கர்ப்பத்தை கண்டறிந்துள்ளனர்.
நவீன கருவிகள் இல்லாமல் கர்ப்பத்தை சிறுநீரில் உள்ள ஹார்மோன்களை அடிப்படையாகக் கொண்டு கண்டறிந்துள்ளனர். எப்படி என்பது குறித்தும் அதற்கான காரணங்கள் குறித்தும் இந்த பதிவில் விரிவாக தெரிந்துக்கொள்ளலாம்.
எகிப்தில் கோதுமை பார்லி பரிசோதனை
எகிப்திய பெண்கள் தங்களது சிறுநீரை கோதுமை மற்றும் பார்லி விதைகள் மீது ஊற்றி, விதைகள் முளைத்தால் அவர்கள் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்திருக்கின்றனர்.
இந்த முறை குழந்தையின் பாலினத்தையும் கணித்ததாக கூறப்படுகிறது. கோதுமை முதலில் முளைத்தால் பெண் குழந்தை பார்லி முதலில் முளைத்தால் ஆண் குழந்தை என்று நம்பப்பட்டது. நவீன அறிவியல் ஆய்வுகள் இந்த முறை 70 சதவீதம் உண்மையாக இருப்பதாக உறுதிப்படுத்தியுள்ளன.
ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண்களின் சிறுநீரில் உள்ள ஹார்மோன்கள் விதைகளின் முளைப்பை வேகப்படுத்தி இருக்கின்றன.
ஐரோப்பாவில் தேனி பரிசோதனை
ஐரோப்பாவில் ஒரு மூடிய பாத்திரத்தில் பெண்கள் சிறுநீரை ஊற்றி அதில் தேனீக்களை விடுவார்களாம். தேனீக்கள் அசாதாரணமாக நகர்ந்தால் அது கர்ப்பத்தின் அறிகுறி என்று அவர்கள் நம்பி இருக்கின்றனர்.
கர்ப்பிணிகளின் சிறுநீரில் உள்ள ஹார்மோன் மாற்றங்கள் தேனீயின் நடத்தையை பாதிக்கும் என்ற நம்பிக்கை அடிப்படையில் இந்த முறையை நம்பி இருக்கின்றனர்
இந்தியாவில் ஆயுர்வேத முறை
இந்தியாவில் ஆயுர்வேத மருத்துவர்கள் நாடி பரிசோதனை முறையை பயன்படுத்தி இருக்கின்றனர்.
வைத்தியர்கள் ஒரு பெண்ணின் நாடியில் ஏற்படும் மாற்றங்களை கவனித்து அவர்கள் கர்ப்பமாக இருப்பதை கண்டறிந்துள்ளனர். ஹார்மோன் மாற்றங்கள் நாடித்துடிப்பு முறையை பாதிக்கும் என்ற ஆயுர்வேத நம்பிக்கையின்படி இந்த முறை செயல்பட்டு இருக்கிறது.
நவீன அறிவியல் கருவி இல்லாத காலத்தில் கர்ப்பத்தை கண்டறிய இயற்கை வழிகளை மக்கள் பயன்படுத்தி இருக்கின்றனர்.