
புதுடெல்லி: “வாக்காளர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் நீக்கம், தகுதியற்றவர்களின் பெயர்கள் சேர்ப்பு தொடர்பான உங்கள் குற்றச்சாட்டு குறித்து விசாரணை மேற்கொள்ள சத்தியப் பிரமாண ஆவணத்தில் கையெழுத்திட்டு அனுப்புங்கள்” என்று ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தேர்தல்களில் மோசடி நடப்பதாக பல்வேறு தரவுகளின் அடிப்படையில் குற்றம்சாட்டினார். ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை அடுத்து, தலைமை தேர்தல் அலுவலர் (தலைமை நிர்வாக அதிகாரி) அவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், "இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வாக்காளர் பட்டியல் பத்தி 3-ன்படி, தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகுதியற்ற வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் நீங்கள் கூறியதை புரிந்து கொள்ள முடிகிறது.