
புதுச்சேரி: தொழிலாளர்கள் நெசவுக் கூலி அகவிலைப்படியில் 20 சதவீதம் ஆகஸ்ட் முதல் உயர்த்தி தரப்படும் என்று முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி கூட்டுறவுத் துறை கைத்தறி பிரிவு மறஅறும் காஞ்சிபுரம் நெசவாளர் சேவை மையம் சார்பில் புதுச்சேரியில் 11-வது தேசிய கைத்தறி தினவிழா இன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்ட மாநில முதல்வர் ரங்கசாமி பேசியது: ”கைத்தறி கடுமையான, பாரம்பரிய தொழில். முன்பெல்லாம் நம் மக்களுடைய வாழ்க்கைக்கு மிக முக்கியமான தொழில். நெசவு தொழில் குடும்பம் எப்படி இருந்தது, தற்போது எப்படி இருக்கிறது என்று எண்ணி பார்க்க வேண்டும். இளையோர் ரெடிமேட், வேறு ஆடைகள் உபயோகப்படுத்தினாலும் கைத்தறியை பயன்படுத்துங்கள்.