
எலான் மஸ்க்கின் நான்கு குழந்தைகளுக்கு தாயான ஷிவோன் ஜிலிஸ், தனது மூன்று வயது மகன் வரைந்த ஓவியத்தை க்ரோக் இமேஜின் (Grok Imagine) கருவியை பயன்படுத்தி ஒரு குறுகிய அனிமேஷன் வீடியோவாக மாற்றியுள்ளார்.
ஸ்ட்ரைடர் என்ற அந்த மூன்று வயது மகன் தனது தந்தை எலான் மஸ்க்காக வரைந்த ஓவியத்தில் ’ஸ்டார்ஷிப்’ என்ற பெயரிடப்பட்டிருந்தது.
அந்த ஓவியத்தில் மஞ்சள் நிற விண்கலன், இளஞ்சிவப்பு நிற செவ்வாய்க் கிரகத்தை நோக்கி பறப்பதாக காட்டப்பட்டிருந்தது. இந்த ஓவியத்தில் ’டூ டாடி’ என்று எழுதப்பட்டிருந்தது.
இந்த ஓவியத்தை க்ரோக் இமேஜின் கருவியை பயன்படுத்தி ஒரு குறுகிய அனிமேஷன் வீடியோவாக ஷிவோன் மாற்றி இருக்கிறார். அந்த வீடியோவை எலான் மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து க்ரோக் இமேஜின் மூலம் உங்கள் குழந்தையின் ஓவியத்தை அனிமேஷன் திரைப்படம் ஆக மாற்ற முடியும் என்று கூறி பதிவிட்டிருக்கிறார்.
இந்த பதிவு வைரலானதையடுத்து, பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் ஓவியங்களை அனிமேஷன் ஆக மாற்றி அதில் பகிர்ந்து வருகின்றனர். குழந்தைகளின் எளிய ஓவியங்கள் நகரும் கதைகளாக மாறும் போது அதனை பலரும் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
Grok Imagine can turn your child’s drawing into an animated movie
pic.twitter.com/b4cHdLvvIZ— Elon Musk (@elonmusk) August 5, 2025
க்ரோக் இமேஜின் என்றால் என்ன?
க்ரோக் இமேஜின் என்பது xAI க்ரோக் செயலியில் உள்ள புதிய அம்சம் ஆகும். இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உரையை படங்களாகவும், படங்களை ஒலியுடன் கூடிய குறுகிய வீடியோக்களாகவும் மாற்ற உதவுகிறது.