• August 7, 2025
  • NewsEditor
  • 0

டாப் குக்கு டூப் குக்கு 2வது சீசன் ஆகஸ்ட் 17-ம் தேதியிலிருந்து ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்கான ஷூட்டிங் இரு தினங்களூக்கு முன் தொடங்கியிருக்கிறது. நிகழ்ச்சியில் பங்கேற்கவிருக்கும் க‌மலேஷ் (டூப் குக்கு) ஷிவாங்கி (தொகுப்பாளர்) மோனிஷா, ஜி.பி.முத்து அதிர்ச்சி அருண், பரத் உள்ளிட்ட சிலரது பெயர்கள் புரொமோவிலேயே வந்து விட்டன. இவர்களில் அருண், ஜி.பி.முத்து, பரத் ஆகியோர் முதல் சீசனிலும் இருந்தவர்கள்.

மேலும் வரும் சீசனில் வரவிருக்கும் முக்கியமான சில போட்டியாளர்கள் குறித்த விபரங்களை சஸ்பென்ஸாக வைத்துளளார்கள்.

இந்த நிலையில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருக்கும் அந்த முக்கியப் போட்டியாளர்கள் குறித்த தகவல் நமக்கு எக்ஸ்க்ளூசிவாகக் கிடைத்தது.

அவர்கள் யார் பார்க்கலாமா?

ஷிவானி

மொட்டை மாடி ஜோடிப் புறா

‘பகல் நிலவு’ தொடர் மூலம் சீரியல் ஏரியாவில் பிரபலமானார். பிறகு சீரியல் நடிகரும் பிக்பாஸ் டைட்டில் வின்னருமான அசீமுடன் இணைத்துக் கிசுகிசுக்கப் பட்டார். தொடர்ந்து சென்னை கொரட்டூரில் இருக்கும் தனது வீட்டு மொட்டை மாடியில் போட்டோஷூட் நடத்தி வைரலாக, பின் பிக்பாஸ் வாய்ப்பைப் பெற்றார். அதே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அசீமும் செல்லக் கூடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அங்கு பாலாஜி முருகதாஸுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதாக பேசப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இந்த ஜோடி கவனிக்கப் பட்டது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியில் வந்ததும் ஓரிரு படங்களில் நடித்தார். தற்போது சினிமா முயற்சியில் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில் டாப் குக்கு டூப் குக்குவுக்கு வருகிறாராம், யாரென கண்டுபிடித்திருப்பீர்கள் தானே? யெஸ், ஷிவானி நாராயணனேதான்.

ரோபோ சங்கர்
ரோபோ சங்கர்

விஜய் டிவியின் ஆஸ்தான காமெடியன்

ரோபோ சங்கர். கலக்கப் போவது யாரு, அது இது எது ஆகிய நிகழ்ச்சிகளின் மூலம் சின்னத்திரையில் உச்சத்துக்கு வந்து, அந்தப் புகழ் மூலமே படங்களிலும் நடித்தவர். நிகழ்ச்சியில் டாப் குக்காக வருகிறார்.

நடிகை பிரியங்கா

மீசைக்கு ஆசைப்பட்ட நடிகை

‘மருதமலை’ படத்தில் மணக்கோலத்துடன் போலீஸ் அதிகாரியான வடிவேலுவிடம் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைவாரே நடிகை பிரியங்கா, அவரும் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக கலந்து கொள்கிறார். வடிவேலுவுடன் அரசு உள்ளிட்ட மேலும் சில படங்களிலும் நடித்திருக்கிறார் இவர்.

kiran

ஓ போடு !

ஜெமினி மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த கிரண் ரத்தோர். அந்தப் படம் ஹிட் ஆக கமல், அஜித் என முன்னணி நடிகர்கள் பலருடன் டூயட் பாடினார். பின்னர் கெஸ்ட் ரோலிலும் ஒரு ரவுண்ட் ஆட்டம் ஆடினார். தென்னிந்திய மொழிகள் எல்லாவற்றிலும் நடித்திருந்தாலும் சமீபமாக சினிமாவில் அவரைப் பார்க்க முடியாமல் இருந்த சூழலில்தான் தற்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்.

பெசன்ட் ரவி

வில்லன் நடிகர்

ஏகப்பட்ட படங்களில் வில்லனாக நடித்துப் பிரபலமடைந்த நடிகர் பெசன்ட் ரவியும் இந்த சீசனில் ஒரு போட்டியாளராக வரவிருக்கிறாராம்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *