• August 7, 2025
  • NewsEditor
  • 0

சின்ன வரி விதிப்பு நிறுத்தம், ஒப்பந்தப் பேச்சுவார்த்தை, அது, இது என இப்போது மீண்டும் ட்ரம்ப், ‘எந்தெந்த நாடுகளுக்கு என்ன வரி?’ என்பதை அறிவித்துள்ளார்.

அதன் படி, இந்தியாவிற்கு 50 சதவிகித வரி பிளஸ் அபராதத்தை விதித்துள்ளார்.

ட்ரம்ப் பதிவு

இந்தப் பரஸ்பர வரி எப்போது முதல் அமலுக்கு வரும் என்பது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், “அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. பல ஆண்டுகளாக, அமெரிக்கா மூலம் பயனடைந்துகொண்டிருந்த நாடுகளிடம் இருந்து பில்லியன் கணக்கான டாலர்கள் சிரித்துக்கொண்டே, அமெரிக்காவிற்கு நுழைய உள்ளது.

ட்ரம்ப் – பரஸ்பர வரி

அமெரிக்காவின் இந்தச் சிறப்பை ஒன்றே ஒன்று தான் தடுக்க முடியும். அது இந்த நாடு தோற்க வேண்டும் என்று நினைக்கிற இடதுசாரி நீதிமன்றங்களால் தான் முடியும்” என்று தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆக, ட்ரம்ப் வரி இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.

ட்ரம்பின் இந்த வரி பெருமளவில் உலக நாடுகளின் ஏற்றுமதிகளைப் பாதிக்கும் என்பது உறுதி.

ட்ரம்பின் ட்ரூத் பதிவு
ட்ரம்பின் ட்ரூத் பதிவு

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *