• August 7, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது 50 சதவிகித வரியை விதித்துள்ளார்.

இது இந்திய ஏற்றுமதிகளைப் பெரியளவில் பாதிக்கும். இப்படி பாதிக்கப்படும் துறைகளில் ஜவுளித்துறை, விவசாயத்துறை, எலக்ட்ரானிக்ஸ் துறைகளும் அடங்கும்.

மோடி என்ன சொல்கிறார்?

இந்த வரி குறித்து முதல்முறையாக மறைமுகமாக பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அவர், “நமக்கு விவசாயிகளின் நலனே மிக முக்கியமானது.

விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால் பொருள் உற்பத்தியாளர்களின் நலனை இந்தியா சமரசம் செய்யாது.

அதற்காக நாம் பெரிய தொகை செலுத்த வேண்டும் என்பது எனக்குத் தெரியும். ஆனாலும், அதற்கு நான் தயாராக இருக்கிறேன்… இந்தியா தயாராக இருக்கிறது” என்று பேசியுள்ளார்.

மோடி – ட்ரம்ப்

ட்ரம்ப் வரிக்கு காரணம் என்ன?

ரஷ்யாவில் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதாக அமெரிக்கா தனது வரியை இரட்டிப்பாக்கி உள்ளது.

மேலும், அபராத தொகையும் இத்துடன் விதிக்க உள்ளது. ஆனால், அந்தத் தொகை எவ்வளவு என்று இன்னும் சொல்லவில்லை.

இந்த நிலையில், மோடி விவசாய நலன் காக்க எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கட்டத் தயார் என்று கூறியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *