
புதுடெல்லி: திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா, பிஜு ஜனதா தள முன்னாள் எம்.பி பினாகி மிஸ்ராவை ஜெர்மனியில் கடந்த மே 30-ல் திருமணம் செய்து கொண்டார். அவர்களது திருமண வரேவற்பு நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடைபெற்றது.
இதில் அரசியல் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர். காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. சகாரிகா கோஷ், தேசியவாத காங்கிரஸ் எம்.பி சுப்ரியா சுலே, சிவ சேனா (உத்தவ் அணி) எம்.பி பிரியங்கா சதுர்வேதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.