
அமெரிக்க அதிபர் ட்ரம்பின் 50 சதவிகித வரி குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூரிடம் கேட்கப்பட்டது.
இதற்கு அவரது பதில்…
“யுரேனியம், பல்லேடியம் போன்ற பல பொருள்களை அமெரிக்கா ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது.
துரதிர்ஷ்டவசமாக, இதில் அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு உள்ளது.
அவர்கள் சீனாவிற்கு 90 நாள் வரி இடைவேளையை அறிவித்துள்ளனர்.
ஆனால், சீனா இந்தியாவை விட அதிகமாக ரஷ்யாவில் இருந்து இறக்குமதிகளைச் செய்து வருகிறது.
இந்திய அரசு மீதுள்ள அழுத்தம்
அமெரிக்க அரசின் இந்த நகர்வு, நாம் நட்பு நாடு என்று நினைத்த ஒரு நாட்டின் நட்பார்ந்த விஷயம் இல்லை.
இதுக்கேற்றாற் போல, நாம் செயல்பட வேண்டும். மேலும், இந்த அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
அமெரிக்கப் பொருள்கள் மீது இந்தியாவும் வரி விதிக்க வேண்டும் என்கிற அழுத்தம் இப்போது இந்திய அரசின் மீதும் எழும்.
அதனால், இந்தச் சூழ்நிலையில், நாம் பிற வர்த்தகக் கூட்டாளிகளைப் பார்க்க தொடங்க வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.