
சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். அரசின் சாதனையால் 14 ஆண்டுகளுக்கு பிறகு, இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
தமிழக நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை சார்பில்உதவி பொறியாளர், உதவி பொறியாளர் (திட்டமிடல்), இளநிலை பொறியாளர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், பணி மேற்பார்வையாளர், நகர திட்டமிடல் ஆய்வாளர் – இளநிலை பொறியாளர் (திட்டமிடல்), பணி ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்கு 2,538 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: