• August 7, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: போக்​கு​வரத்​துக் கழக ஓய்​வூ​தி​யர்​களுக்கு அகவிலைப்​படி உயர்த்​தப்​பட்​டுள்​ளது. தமிழகத்​தில் அரசுத்​துறை ஓய்வூதியர்களுக்கு தொடர்ச்​சி​யாக அகவிலைப்​படி உயர்வு கிடைக்​கும் நிலை​யில், அரசு போக்​கு​வரத்​துக் கழக ஓய்​வூ​தி​யர்​களுக்கு 2015-ம் ஆண்டு இறுதி முதல் அக்​டோபர் மாதத்​துக்​குப் பிறகு அகவிலைப்​படி உயர்வு மறுக்​கப்​பட்​டது. இதை எதிர்த்து பல்​வேறு கட்ட போ​ராட்​டங்​கள், நீதி​மன்ற வழக்​கு​களைத் தொடர்ந்​து, அகவிலைப்​படி உயர்வு படிப்​படி​யாக வழங்​கப்​பட்டு வரு​கிறது.

இதுகுறித்து அரசு போக்​கு​வரத்து ஓய்​வூ​தி​யர் நல மீட்பு சங்​கத் தலை​வர் டி.க​திரேசன் கூறும்​போது, “ஊதிய ஒப்​பந்த பலனும் விரைவில் வழங்​கப்​படும் என்று நம்​பு​கிறோம். இல்​லா​விட்​டால் அக்​.7-ம் தேதி மிகப்​பெரிய அளவில் போ​ராட்​டம் நடத்​து​வோம்​” என்றார்​.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *