
சென்னை: சிஎம்டிஏ சார்பில் ரூ.28 கோடியில் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையம் மற்றும் பெரம்பூர் சென்னை மேல் நிலைப் பள்ளியில் கூடுதல் பள்ளிக்கட்டிடங்களை திறந்துவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், ரூ.17.65 கோடியில் 14 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னை கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ) சார்பில் ரூ.18.26 கோடி செலவில் 30 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கிளாம்பாக்கம் காவல் நிலையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.