• August 6, 2025
  • NewsEditor
  • 0

ஆகஸ்ட் 6 – முக்கிய செய்திகள்!

* அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியா மீதான வரியை 25 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயர்த்தியிருக்கிறார்.

* மகாராஷ்டிரா மாநிலத்தில் சுற்றுலாத்தலமாக மாதேரான் மலைப்பகுதியில் அடுத்த கையால் இழுக்கப்படும் ரிக்‌ஷாக்களுக்கு முழுமையாகத் தடை விதித்த உச்ச நீதிமன்றம், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகளாகியும் இதை அனுமதிப்பது மனித கண்ணியத்துக்கு எதிரானது. இந்தியா மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை சிறுமைப்படுத்தும் செயல்” என்று கூறியிருக்கிறது.

* தமிழ்நாடு 14 ஆண்டுகளுக்குப் பிறகு 11.19 சதவிகிதம் என இரட்டை இலக்கத்தில் பொருளாதார வளர்ச்சியடைந்திருக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்.

* கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 14 பேர், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிப்பு.

* திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இரா.முத்தரசன், பெ.சண்முகம், திருமாவளவன் ஆகியோர் முதல்வர் ஸ்டாலினை இன்று நேரில் சந்தித்து, “ஆணவக்கொலைகளைத் தடுக்க தனிச் சட்டம் கொண்டுவர வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தனர்.

* உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயர் மற்றும் புகைப்படத்தைப் பயன்படுத்தப்படுவதற்குத் தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தொடுத்த வழக்கில், அவருக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்ச நீதிமன்றம், சி.வி சண்முகத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம் விதித்தது.

* திருப்பூர் எஸ்.எஸ்.ஐ சண்முகவேல் கொலை வழக்கில் முருகன், தங்கப்பாண்டி ஆகிய இருவர் போலீஸில் இன்று சரணடைந்தனர். உயிரிழந்த சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ. 1 கோடி நிவாரண நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு.

* டெல்லி சட்டமன்றத்தில் காகிதமில்லா நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் உட்பட மொத்தமுள்ள 70 எம்.எல்.ஏக்களுக்கும் அதிகாரப்பூர்வ பயன்பாட்டுக்காக ஐபோன் 16 ப்ரோ வழங்கப்பட்டிருக்கிறது.

* விஜய் தேவரகொண்டா நடிப்பில் கடந்த வரம் வெளியான கிங்டம் படத்தில், இலங்கைத் தமிழர்களைத் தவறாகச் சித்தரிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக எதிர்ப்புகள் எழுந்த நிலையில், படத் தயாரிப்பு நிறுவனம் இன்று “படத்தின் கதை முற்றிலும் கற்பனையானது. மக்களின் உணர்வுகள் ஏதேனும் வகையில் புண்பட்டிருந்தால், அதற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம்.” என்று வருத்தம் தெரிவித்தது.

* உலகப் புகழ்பெற்ற டைட்டானிக், அவதார் ஆகிய படங்களின் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், ஜப்பான் மீது அமெரிக்க அணுகுண்டு வீசியது தொடர்பான ‘கோஸ்ட்ஸ் ஆஃப் ஹிரோஷிமா’ நாவலைத் தழுவி அடுத்த படம் எடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறார்.

* ஒட்டுமொத்தமாக டி20 கிரிக்கெட்டில் 650 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனைப் படைத்திருக்கிறார் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *