
புதுடெல்லி: பிஹாரில் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக எந்த அரசியல் கட்சியும் இதுவரை (இன்று காலை 9 மணி வரை) ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1ம் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இந்த வரைவு வாக்காளர் பட்டியல், தேசிய மற்றும் மாநில கட்சிகளின் 1,60,813 வாக்குச்சாவடி நிலையிலான முகவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. பட்டியலில் திருத்தம் ஏதும் தேவைப்படின் அது குறித்து தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. எனினும், இன்று (ஆகஸ்ட் 6 காலை 9 மணி) வரை எந்தவொரு அரசியல் கட்சியும் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை. உரிமை கோரல் தொடர்பான எவ்வித மனுவும் பெறப்படவில்லை.