• August 6, 2025
  • NewsEditor
  • 0

‘சிரஞ்சீவி அறக்கட்டளை’ மூலமாகப் பலருக்கும் பல நலத்திட்ட உதவிகளைத் தொடர்ந்து செய்து வருகிறார் நடிகர் சிரஞ்சீவி.

முக்கியமாக, இரத்த வங்கிகளை நடத்தி, அதன் மூலம் பலருக்கு இரத்த தானம் செய்து வருகிறது ‘சிரஞ்சீவி அறக்கட்டளை’.

Chiranjeevi

இன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற இரத்த தான முகாம் ஒன்றில் டோலிவுட் நடிகர்கள் சிரஞ்சீவி, தேஜ சஜ்ஜா உட்பட சிலர் கலந்துகொண்டனர்.

அங்கு நடிகர் சிரஞ்சீவி, தன்னுடைய இரத்த வங்கி தொடங்கியதற்கான காரணத்தைப் பகிர்ந்திருக்கிறார்.

சிரஞ்சீவி பேசுகையில், “ஒரு பத்திரிகையாளர் இரத்த வங்கிகளின் தேவை குறித்து ஒருமுறை எழுதியிருந்தார்.

அந்தக் கட்டுரையைப் படித்த பிறகுதான் இரத்த வங்கிகளைத் தொடங்க வேண்டும் என முடிவு செய்தேன்.

அந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிகையாளரை நான் நேரில் சந்தித்ததே இல்லை. ஆனால், எனக்கு இந்த சிந்தனையைக் கொடுத்த அவருக்கு நான் என்றும் கடமைப்பட்டிருக்கிறேன்.

என்னைத் தாக்குபவர்களுக்கு நான் எளிதான இலக்கு என்பது எனக்குத் தெரியும்.

Chiranjeevi
Chiranjeevi

சமூக ஊடகங்களில் நான் தாக்கப்படும்போது ஏன் மௌனமாக இருக்கிறேன் என்று பலர் என்னிடம் கேட்டனர்.

நான் செய்த நல்ல செயல்களும், அதனால் எனக்குக் கிடைத்த அன்பும் எனது கேடயங்களாக உள்ளன என்று அவர்களிடம் கூறினேன்.

அவை எனக்காகப் பேசும். ஒருமுறை ஒரு அரசியல் விமர்சனத்தில் என்னை ஒருவர் காப்பாற்றினார்.

பின்னர், என்னுடைய இரத்த வங்கி மூலம் அவருடைய மகள் உயிருடன் இருப்பதாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

இப்படியான நிகழ்வுகள் எனக்கு வலிமையைக் கொடுத்து, என்னுடைய சேவையில் தொடர்ந்து பயணிக்க வைக்கின்றன,” என்று கூறியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *