
சென்னை: அன்புமணி தலைமையில் வரும் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே அண்மைக்காலத்தில் கருத்து மோதல்கள் ஏற்பட்டு உள்ளது. பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கி விட்டு அவரை செயல் தலைவராக நியமித்தத்தோடு மட்டுமல்லாமல் இனிமேல் நான் தான் பாமகவிற்கு தலைவராக இருப்பேன் என்றும் ராமதாஸ் அறிவித்தார்.