• August 6, 2025
  • NewsEditor
  • 0

கோவையில் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் செய்தியாளர்களைச் சந்தித்து கூறுகையில், “இந்தியாவின் முன்னேறிய மாநிலமாக தமிழகத்தை கூறுகிறார்கள். சிவகங்கை மாவட்டம், நாட்டாக்கு என்கிற ஒட்டுமொத்த கிராமத்தையும் இரவோடு இரவாக காலி செய்திருக்கிறார்கள். இது அரசுக்கு அவமானம்.

வானதி சீனிவாசன்

ஒருபக்கம் நகர்மயம், தொழில்மயம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது. அதே மாநிலத்தில் ஒரு குக்கிராமத்தின் நிலை இதுதான். அரசாங்கத்தின் கவனம் கிராமங்களுக்கு செல்லவில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஓர் உதாரணம்.

முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் எங்கு எல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கு எல்லாம், அப்பா மன்னராகவும், மகன் இளவரசாகவும் பாவனை செய்கிறார்கள். தமிழ்நாடே ஏதோ அவர்களுக்கு தான் சொந்தம் என்கிற கற்பனையில் இருக்கிறார்கள்.

உதயநிதி ஸ்டாலின், மு.க. ஸ்டாலின்

எதற்காக அந்த மக்களை இப்படி கிராமத்தை விட்டே காலி செய்ய சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் தேவைகள் என்ன என்பதை முதலமைச்சரும், மாவட்ட ஆட்சியரும் கண்டறிந்து உதவி செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டில் ஒருபக்கம் காவலர்கள் மீது தாக்குதல்,  காவல் நிலையத்தில் தற்கொலை சம்பவங்கள் நடைபெறுகின்றன. மறுபக்கம் காவல் நிலைய அதிகாரிகள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துகிறார்கள். காவல்துறை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காததால் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெறுகின்றன.

சட்டம் ஒழுங்கு

மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக தற்போது தமிழகம் கட்டுப்பாடற்ற சூழ்நிலையில் சென்றுவிட்டது.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *