
திருவாரூர்: தமிழகத்தின் 11.9% என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் எல். முருகன் வயிற்றெரிச்சலில் பேசுவதாக அமைச்சர் டிஆர்பி.ராஜா கருத்து தெரிவித்துள்ளார்.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி அரசினர் கலை கல்லூரியில் இன்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, செய்தியாளர்களை சந்தித்தார்.