
சென்னை: ‘கிங்டம்’ திரைப்படம் திரையிடுவதை நாம் தமிழர் கட்சியினர் தடுப்பதாகக் கூறி, திரையரங்குகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, பட விநியோக நிறுவனம் தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக காவல் துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள கிங்டம் திரைப்படத்தில், தமிழீழ மக்களை இழிவுபடுத்தும் வகையில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.