
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்
மாநகரம் எப்போதும் அழகு தான்..
எதைப் பார்ப்பது
நிற்பதையா?
நடப்பதையா?
பறப்பதையா? என்பதில் தான் தொடங்குகிறது?
இந்த கவிதைகளோடு முதல் முறையாக என்னை வரவேற்றது தான் சென்னை. எனது பேருக்கு முன்னால் எழுத்தாளர் இந்த பட்டத்தை கொடுத்து முதல் விருதை வழங்கியது இந்த மாநகரம்தான்.. முதன்முதலில் வரும் பொழுது சென்னைக்கு வழி தெரியாது..
இடம் தெரியாது…
மொழி தெரியாது..
வானுயர்ந்த கட்டிடங்களை பார்த்து வாய்ப்பு பிழந்தேன்..
வட்டமடிக்கும் மேம்பாலங்கள் பார்த்து வாயடைதேன்.
கையில் துண்டு சீட்டுடன் முகவரியை கொண்டு அலைந்து கொண்டிருந்தேன்..எனக்கு அடையாளம் கொடுத்து எனது எழுத்தின் முதல் அத்தியாயம் தொடங்கி கொடுத்தது இந்த சென்னை தான்..
விருதை கையில் வாங்கிக்கொண்டு சொந்த ஊருக்கு வரும்பொழுது சொந்தமும் சொந்த ஊர் நண்பரும் எனக்கு கொடுத்த மரியாதை உண்மையில் மறக்க முடியாது. மூன்றெழுத்தில் தொடங்குவது சென்னை மட்டுமா?
அம்மா, அப்பா ,அன்பு, பாசம், காதல் எல்லாவற்றையும் அனுபவத்தோடு சொல்லித் தருவதில் சென்னை மிக்க அனுபவசாலி… இந்த நகரத்தில் ஜாதி இல்லை மதம் இல்லை நிறமில்லை எல்லோரும் ஒரே மாதிரியாக பார்க்கப்படுகிறார்கள்.
இங்கு எல்லோருக்கும் பொதுவானது உழைப்பு மட்டும் தான்..எப்படி வாழ வேண்டும்? எப்படி வாழ கூடாது? இங்கு தான் கற்றுக் கொண்டேன்.. இன்றும் ஞாபகம் உள்ளது சென்னையில் வேலைக்காக வந்த நாட்கள் ஒரே அறையில் 16 நபர்கள் இருந்தோம். இப்போது ஒவ்வொருவரும் பல கிளைகளாக பிரிந்து சென்னை என்ற மாமரத்தின் கீழ் தான் வாழ்ந்துக் கொண்டு உள்ளார்கள்..
காசு இல்லாத நாட்களை எத்தனை அறக்கட்டளைகள் தன்னார்வகள் வழியாக எனது பசி ஆறியது.அம்மா உணவகங்கள் எத்தனை முறை தாய் வீடானது என்பது என்னை போன்றவர்களுக்கு மட்டுமே தெரியும்..பத்து ரூபாய் சம்பாதிப்பது எவ்வளவு சிரமமானது அதை செலவு செய்வது எவ்வளவு எளிமையானது. வாய்ப்புகளை உருவாக்குவதை விட பயன்படுத்தி கொள்வது சாதுரியமானது என்பதை தினம் தினம் கற்றுக்கொடுத்தது இந்த சென்னை..

*வேட்டியோடு வந்தவனை பேண்ட் போட்டும்” “சேலை விட்டு வந்தவளை சுடிதார் போட வைத்ததும்” இந்த சென்னை தான். சொந்தங்களையோ பெற்றோர்களையோ என யாரையும் நம்பாமல் உன்னை மட்டும் நம்பிக்கொள் என நம்பிக்கையின் பிரதிபலிப்பாக விளங்குகிறது இந்த நகரம். “மாசுபட்ட காற்று தான் இருந்தாலும் மணக்கிறது.”
“இரைச்சல் மிகுந்த பகுதி தான் இருந்தாலும் ரசிக்கிறது..”
“சாப்பிட்டா செலவாகும் டீ குடிக்கலாம்.”
“இந்த வேலை மட்டும் கிடைச்சுச்சுனா நான் தான் ராஜா…”
“எப்படியாவது கடன் அடைச்சுடனும்..”
லோன் போய்ட்டு இருக்கு அதன் இன்னும் கொஞ்சம் நேரம் வேலை செய்யறேன்.”
இப்படி பல வாக்கியங்கள் சென்னை காற்றில் மிதந்து கொண்டே தான் இருக்கிறது. நான்கு சுவருக்குள் நம்பிக்கையை மட்டும் வைத்துக்கொண்டு வாழ்கின்ற பலருக்கு சென்னை ஒரு வரப்பிரசாதம்.. சென்னை தான் என்னை பேச வைத்தது..
சென்னை தான் என்னை எழுத வைத்தது.. சென்னை தான் என்னை எழுத்தாளர் ஆக்கியது.. உலகம் முழுவதும் என்னை பறக்க வைத்தது..பல கனவுகளோடு சென்னை வந்தேன் எல்லா கனவையும் நிறைவேற்றிவிட்டு மகிழ்ச்சியோடு சொந்த ஊரிலேயே தங்கி விட்டேன். வெறுங்கையை வீசிக் கொண்டு வந்தவனுக்கு வேலையும் கொடுத்து மரியாதை கொடுத்து சொந்தமாக ஒரு வீடு கட்டும் அளவிற்கு என் உயர்த்தி இதுதான் இந்த மாநகரம்.. கையில் ஒரு பை யோடு முன்பதிவு இல்லாத பெட்டியில் தொங்கிக்கொண்டு வந்தவனை திருப்பி அனுப்பியது AC பெட்டியில் தான்.
இன்றும் இதயத்தில் நீங்கா இடம் சென்னைக்கு எப்போதும் உண்டு..
எழுத்தாளர் ரசூல் முகைதீன்
கன்னியாகுமரி மாவட்டம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே…!