• August 6, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

சென்னை என்றவுடன்  நினைவுக்கு வருவது சென்னை ரயில்வே ஸ்டேஷன், மெரினா பீச் ,காந்தி மண்டபம், ஸ்பென்சர் பிளாசா, ஜெமினி பாலம், கோயம்பேடு பேருந்து நிலையம் ,அண்ணா சமாதி, கன்னிமாராநூலகம்,அருங்காட்சியகம்.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவேற்காடு கருமாரியம்மன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர்…. சாந்தோம் சர்ச் ,இஸ்லாமிய தர்காவான குணங்குடி மஸ்தான் ஆலயம்… இப்படி நிறைய்ய்ய… நிறையய்ய்ய… .

எட்டாம் வகுப்பு படித்தபோது வளவனூரில் இருந்து ‘ஒரு நாள் சுற்றுலா’ என சென்னை வந்ததுதான் என் முதல் சென்னைப் பயணம். அது இன்னமும் என் நினைவு அடுக்குகளில்   (ஜன்னலோர பேருந்து பயணம்) வெளியே சிலு சிலுவென்று காற்று, நம் கூடவே பயணிக்கும் மேக கூட்டங்கள் இவற்றையெல்லாம் ரசித்துக் கொண்டே… சென்னையின் பிரம்மாண்டம் சங்கரின் திரைப்படம் போல் மனதை விட்டு அகலாமல் இன்னமும்….

மெரினா கடற்கரையில், கடற்கரை மண்ணில் கால் பதித்த போது உடல் முழுவதும் ஒரு சிலிர்ப்பு..ஈர மணலில் கை வைத்து என் பெயரை எழுதி பார்த்தது ஒரு கவிதையாய் மனதுக்குள் அப்படியே பதிந்திருக்கிறது.
‘அலைகள் அழகான ராகமிசைக்க மனதிற்குள் அமுத கானங்கள்”…

சென்னை

அவ்வப்போது அலைகள் கரை வந்து, கால் நனைத்து அழகை பதித்ததை மறக்க முடியுமா??

அருங்காட்சியகத்தின் பிரம்மாண்டம் கண்ணை விட்டு அகலாமல் எத்தனையோ இரவுகள் தூங்கவிடாமல் செய்திருக்கிறது.  வங்காள விரிகுடாவின் கரையில் அமைந்த துறைமுக நகரமான சென்னையில் அண்ணா சமாதி யின் நிசப்தம் மயிலிறகால்  வருடும்.

 சகோதரி…திருமணம் முடிந்து சென்னை வர,  எப்போதடா விடுமுறை வரும் சென்னைக்கு வரலாம்ன்னு காத்திருந்ததெல்லாம் அழகிய கனாக்காலம்.

ஒவ்வொரு முறை வரும் போதும் கடற்கரைக்கு ஒரு வணக்கம் சொல்லாமல் இருந்ததில்லை. 

இப்படி என் உயிர் மூச்சில் கலந்த சென்னை ஒருகட்டத்தில் என் புகுந்த வீட்டின் முகவரியாக மாற ஒரு சுபயோக சுப தினத்தில் வலது காலை எடுத்து வைத்து சென்னை வந்தேன்.

“நம்ம சென்னை 
நம்ம பெருமை”..

வந்தாரை வாழவைக்கும் சென்னை. பாமரனுக்கும் ,படித்தவர்களுக்கும் படியளிக்கும் சென்னை. 
சந்து பொந்து போக ஆட்டோ சொந்தபந்தம் வர கால் டாக்ஸி…ஓலா.. எறும்பைப் போல் சுறுசுறுப்பு கொண்ட மக்கள்…  தமிழகத்தை ஆளுகின்ற சட்டசபை …பிழைப்புத் தேடி வந்தவர்களை தலைப்பாக செழிக்க வைத்தது.

தொழில் மிகுஎழில் நகரமான சென்னையின் பாதாளரயில், பறக்கும் ரயில், அழகு மிக மேம்பாலங்கள் நீளமான கடற்கரை, ரிப்பன் மாளிகை அரசு பொது மருத்துவமனை… களைப்பாக வருபவர்களை இளைப்பாற்றி அனுப்பும் மெரினா… அழகான மவுண்ட் சாலையின் நெற்றியில் பளீரென்ற குங்குமம் போல் எல்ஐசி… 

தங்கத் தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையை இயற்கை சீற்றங்கள் பலவந்து சீரழித்து விட்டுச் சென்றாலும் பீனிக்ஸ் பறவை போல் சிலிர்த்தெழும்.அற்புதம் வேறு எஙகும் காணக் கிடைக்காத ஒன்று.

எங்கிருந்தோ பிழைப்பு தேடி சென்னைக்கு வந்தவரெல்லாம் இங்கு கிடைக்கும் சௌகரியங்களை அனுபவித்துக் கொண்டு திட்டும்போது போது மட்டும் கோபம் பொத்துக் கொண்டு வரும்.

அதிலும் குறிப்பாக தீபாவளி, பொங்கலுக்கு சொந்த ஊருக்கு சென்று விட்டு வரும்போதும்/வீக்எண்ட் எங்காவது சென்று விட்டு  ஞாயிறு அன்று இரவு வரும்போதும் (குறிப்பாக பெருங்களத்தூர் )திட்டுவார்கள் பாருங்க நாலு கேள்வி நறுக்குன்னு கேட்கணும் போல இருக்கும்.

மொத்தத்தில் நவீனங்களுக்கு ஏற்ப மாறுவதே சென்னையின் சிறப்பு.

 சென்னையில் சம்பாதிப்பது சென்னையில் சொகுசாய் வாழ்வது.. என சந்தோஷமாக இருந்து விட்டு,  சொர்க்கமே என்றாலும் சொந்த ஊரை போல் வருமா? என சென்னையைத் திட்டும்போது.. இவர்களுக்கெல்லாம் மனசாட்சியே இல்லையா? ன்னு நினைக்க தோணும். 

உங்களை வாழவைக்கும் 

சென்னையை மனதார வாழ்த்துங்கள்.

மேலே மேலே அது உங்களை உயர்த்தி உயரத்தில் வைத்து அழகு பார்க்கும்..

கொஞ்சம் யோசிங்க பாஸ்!
ஐ லவ் சென்னை!
என்றென்றும் அன்புடன்
ஆதிரை வேணுகோபால்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *