• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: தமிழகத்​தில் சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில், ஆவின் ​பால் விற்​பனை 30 சதவீதம் உயர்ந்​துள்​ள​தாக பால் வளத்​துறை அமைச்​சர் மனோ தங்​க​ராஜ் தெரி​வித்​தார். ஆவின் முகவர்​களுக்கு உரைக்​கலன் வழங்​குதல் மற்​றும் மொத்த விற்பனையாளர்​களுக்கு ஆணை வழங்​கும் நிகழ்ச்​சி, சென்னை நந்​தனத்​தில் உள்ள ஆவின் இல்​லத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதில் பால்​வளத்​துறை அமைச்​சர் மனோ தங்​க​ராஜ் கலந்​து கொண்டு ஆணை​களை வழங்​கி​னார்.

பின்​னர், செய்தியாளர்களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்தில் சென்னை உள்​ளிட்ட முக்​கிய நகரங்​களில், ஆவின் பால் விற்​பனை 30 சதவீதம் உயர்ந்​துள்​ளது. கடந்த ஆண்டு ரூ.25 கோடிக்கு விற்​பனை​யானது. இந்த ஆண்டு சுமார் ரூ.33 கோடிக்கு விற்​பனை​யாகி​யுள்​ளது. இதன்​மூலம், கடந்த ஆண்டை விட 30 சதவீதம் அதி​கரித்​துள்​ளது. இந்த பால் உற்​பத்​தியை பெருக்க தொடர்ந்து நடவடிக்கை மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *