• August 6, 2025
  • NewsEditor
  • 0

ஏ.ஐ என்ற வார்த்தை, கொஞ்சம் கொஞ்சமாக உலகை ஆள தொடங்கியிருக்கிறது.

இப்போது நிறுவனங்களும் ஏ.ஐ நிபுணர்கள், ஏ.ஐ ஆய்வாளர்களை வேலைக்கு எடுக்க தொடங்கியிருக்கிறது. அதனால், ஏ.ஐ தெரிந்திருப்பர்வகளுக்கு இப்போது தனி மவுசு உண்டாகியிருக்கிறது என்றே கூறலாம்.

அப்படியான ஒரு ஏ.ஐ ஆய்வாளருக்காக, ஃபேஸ்புக் நிறுவனர் மற்றும் மெட்டாவின் தலைமை செயலதிகாரி மார்க் சக்கர்பெர்க் இறங்கி வந்துள்ளார்.

யார் அவர்?

மாட் டெய்ட்கே

24 வயதான மாட் டெய்ட்கே தான் அந்த ஏ.ஐ ஆய்வாளர். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸில் பி.எச்.டி படிப்பு படித்து கொண்டிருந்தார். ஆனால், ஏ.ஐ மீதிருக்கும் ஆர்வத்தால், பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு, ஏ.ஐ உலகிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார்.

ஆலன் ஏ.ஐ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த இவர், அந்த நிறுவனத்தில் தனக்கான இடத்தைப் பிடித்துள்ளார்.

அங்கே மோல்மோ என்ற ஏ.ஐ ஆப் உருவாக்கத்தில் பங்காற்றி உள்ளார்.

பிறகு, பல்வேறு விஷயங்களை ஏ.ஐ துறையில் சாதித்துள்ளார்.

மெட்டாவின் ஆஃபர்

ஏ.ஐ தனக்கென தனி இடம் பிடித்த இவரை, மெட்டா நிறுவனம் 2024-ம் ஆண்டு, அவரை அணுகியுள்ளது.

மெட்டாவின் ஏ.ஐ ஆய்வகமான சூப்பர் இன்டெலிஜன்ஸ் லேப்பில் இவரைப் பணியமர்த்த, ‘நான்கு ஆண்டுகளுக்கு 125 மில்லியன் டாலர் தருகிறோம்’ என்று ஆஃபர் கொடுத்துள்ளது.

ஆனால், தனது கரியரின் ஆரம்பத்திலேயே இந்த ஆஃபரை ஒத்துக்கொண்டால், ஏ.ஐ-யில் தனக்கு வேண்டுகிற சோதனைகளைச் செய்து பார்க்க முடியாது என்று மறுத்திருக்கிறார்.

Matt Deitke
Matt Deitke

மீண்டும் கதவைத் தட்டிய மெட்டா

இந்த நிலையில், மீண்டும் இவரை மெட்டா நிறுவனம் அணுகியிருக்கிறது.

அப்போதும் இவர் மறுத்துள்ளார்.

அதன் பிறகு, மார்க் சக்கர்பெர்கே இவரை நேரடியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

அப்போது, இவரது சம்பளம் நான்கு ஆண்டுகளுக்கு 250 மில்லியன் டாலர் என்று இரட்டிப்பாக்கி பேசப்பட்டுள்ளது. முதலாம் ஆண்டிலேயே 100 மில்லியன் டாலர் கொடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

250 மில்லியன் டாலர் என்பது கிட்டத்தட்ட ரூ.2,000 கோடி.

இந்தப் பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாட் ஆஃபரை ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஆக, இவர் இப்போது மெட்டாவின் ஏ.ஐ பணியாளர்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *