
ஜெய்ப்பூர்: ராணுவத்துக்கு தேவையான ஆயுதங்களை ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) தயாரித்து வருகிறது. இந்த ஆயுதங்கள் ராஜஸ்தானின் ஜெய்சல்மர் மாவட்டத்தில் உள்ள பொக்ரான் மையத்தில் சோதித்து பார்க்கப்படுவது வழக்கம்.
இவற்றை பார்வையிட வரும் டிஆர்டிஓ மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் டிஆர்டிஓ விருந்தினர் மாளிகையில் தங்குவது வழக்கம். பொக்ரானின் டிஆர்டிஓ நடத்தும் சோதனை விவரங்கள் எல்லாம் பாகிஸ்தானுக்கு முன் கூட்டியே தெரிந்து விடுகிறது. இந்த தகவல்களை அனுப்புவது யார் என்று ஆய்வு செய்தபோது, விருந்தினர் மாளிகை மேலாளர் மகேந்திர பிரசாத் சந்தேக வலையில் சிக்கினார். இதையடுத்து அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.