
அறிமுக இயக்குநர் ஜுன் மோசஸ் எழுதி இயக்கும் படம் ‘பேய் கதை’. இதில் வினோத் நாயகனாக அறிமுகமாகிறார். ஆர்யலட்சுமி, கானா அப்பிலோ, சுகன்யா, ஆஷ்மெலோ, செல்வா, எலிசபெத் சுராஜ், மைக்கேல், சுமந்த் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஆகஸ்ட் 29 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகிறது.
இந்நிலையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா (ஆகஸ்ட் 5) நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டிருந்த தேவாவின் சகோதரரும், பாடகருமான சபேஷிடம், தேவா சார் 400 படத்திற்கு மேல் இசையமைத்திருக்கிறார். அவரது மகன் ஸ்ரீகாந்த் தேவாவிற்கு கூட விருது கிடைத்திருக்கிறது. ஆனால் தேவா சாருக்கு ஏன் தேசிய விருது கிடைக்கவில்லை என்ற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.
அதற்கு பதிலளித்த அவர், “அவருக்கு விருது கிடைக்காதது வருத்தமாக இருக்கிறது. நிறைய நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். தேவாவிற்கு ‘காதல் கோட்டை’ படத்திற்கே தேசிய விருது கிடைத்திருக்க வேண்டும். அண்ணன் வாங்கவில்லை என்றால் என்ன? அப்பாவிற்கு பதில் மகன் ஸ்ரீகாந்த் தேவா வாங்கி இருக்கிறார்.

கானா என்றாலே தேவா என்று சொல்வார்கள் ஆனால் ஒரு படத்திற்கு ஒரு கானா பாடல்தான் இருக்கும், மற்றவையெல்லாம் மெலோடி பாடல்கள் தான்” இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…