
மஞ்சு விரட்டுப் பின்னணியில் விமல் நடிக்கும் படத்துக்கு ‘வடம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். மாசாணி பிக்சர்ஸ் சார்பில் ஆர்.ராஜசேகர் தயாரிக்கும் இதில், நாயகியாக சங்கீதா நடிக்கிறார்.
பால சரவணன், நரேன், ராஜேந்திரன், சிங்கம் புலி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார். பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு செய்கிறார். வி. கேந்திரன் இயக்கும் இந்தப் படத்தின் பூஜை, கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் நடந்தது.