• August 6, 2025
  • NewsEditor
  • 0

புதுடெல்லி: உத்தர பிரதேசத்​தில் அரசு நில ஆக்​கிரமிப்பை அகற்​றும் நடவடிக்​கை​யில், யாதவர், முஸ்​லிம்​களுக்கு எதி​ரான சுற்றறிக்​கையை முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் ரத்து செய்​துள்​ளார். உத்தர பிரதேசத்​தில் முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத் தலைமையிலான ஆட்சி அமைந்​தது முதல் அரசு நில ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன. 57,000-க்​கும் மேற்​பட்ட கிராம பஞ்​சா​யத்​துகளில் அரசு பொது நிலங்​கள் உள்​ளன. இவற்​றில், கிராம சபை நிலம், குளங்​கள், கொட்​டகைகள், உரக் குழிகள், தகன மைதானங்​கள் உள்​ளிட்ட ஆக்​கிரமிப்​பு​கள் அகற்​றப்​பட்டு வரு​கின்​றன.

இந்த நடவடிக்​கைக்​காக, பஞ்​சா​யத்து ராஜ் துறை​யின் தலைமை அலு​வலக இணை இயக்​குநர் சார்​பில் ஒரு சுற்​றறிக்கை பிறப்​பிக்கப்​பட்​டது. அது அனைத்து 75 மாவட்ட ஆட்​சி​யர்​கள், அரசு நில நிர்​வாகப் பிரிவு துணை இயக்​குநர்​கள் மற்​றும் மாவட்ட பஞ்சாயத்து ராஜ் அதி​காரி​களுக்கு அனுப்​பப்​பட்​டது. அதில், யாதவர்​கள், முஸ்​லிம்​களின் நில ஆக்​கிரமிப்​பு​களை அகற்ற வேண்​டும் என குறிப்​பிடப்​பட்​டிருந்​தது. இது தொடர்​பாக முதல்​வர் யோகி ஆதித்​ய​நாத்​துக்கு புகார் மனுக்​கள் வந்​தன.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *