
புதுடெல்லி: ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்த வரியை மேலும் உயர்த்துவேன் என்று நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவை தொடர்ந்து குறி வைத்து வருகின்றன. இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்து வந்த நாடுகள், உக்ரைன் போருக்கு பிறகு ஐரோப்பிய நாடுகளுக்கு கச்சா எண்ணெய் விநியோகிக்க தொடங்கிவிட்டன.