• August 6, 2025
  • NewsEditor
  • 0

சென்னை: சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்​டுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்புயர்வு மையத்தை முதல்​வர் விரை​வில் திறந்து வைக்​க​வுள்​ளார் என்று சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார். சென்னை அரசு மனநல மருத்​து​வ​மனை​யில் ரூ.40.5 கோடி​யில் தீவிர சிகிச்​சைப் பிரிவு கட்​டிடத்​துக்கு சுகா​தா​ரத்​துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன், இந்து சமய அறநிலை​யத்​துறை அமைச்​சர் பி.கே.சேகர்​பாபு ஆகியோர் நேற்று அடிக்​கல் நாட்​டினர்.

தொடர்ந்​து, ரூ.42 கோடி​யில் கட்​டப்​பட்டு விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரவுள்ள மனநலம் மற்​றும் நரம்​பியல் ஒப்​புயர்வு மையம் கட்டு​மான பணி​யினை ஆய்வு செய்​தனர். மருத்​து​வக்​கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் (பொ) தேரணி​ராஜன், அரசு மனநல மருத்​து​வ​மனை இயக்​குநர் மாலை​யப்​பன் உள்​ளிட்​டோர் உடன் இருந்​தனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *