
ராமநாதபுரத்தில் `கிங்டம்' திரைப்படத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்கை முற்றுகையிட முயன்ற நாம் தமிழர் கட்சியினர் 35 பேரை போலீஸார் கைது செய்தனர். இதேபோல், மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் நாதகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் `கிங்டம்' திரைப்படம் கடந்த மாதம் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு காட்சிகள் அமைந்திருப்பதாக கூறி இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நாம் தமிழர் கட்சியினர் சார்பில் திரைப்படத்தை திரையிடக் கூடாது என வலியுறுத்தி திரையரங்குகளை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது.