
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் ‘கூலி’ ஆகஸ்ட் 14-ம் தேதி ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.
அனிருத் இசையில் வெளியாகியிருக்கும் ‘கூலி’ படத்தின் அத்தனை பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
‘கூலி’ திரைப்படத்திற்காக அனிருத்தும் இப்போது சில நேர்காணல்களைக் கொடுத்து வருகிறார்.
அப்படி சமீபத்தில் கொடுத்த நேர்காணல் ஒன்றில் தனக்கு சிந்தனை தடை ஏற்படும்போது ஏ.ஐ உதவியை நாடுவதாக அனிருத் சொன்ன கருத்து இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அனிருத் பேசும்போது, “அனைவருக்குமே சிந்தனை தடைபடத்தான் செய்யும். ஆனால், இன்றைய தேதியில் அது ஏற்படுவது ஓகேவான விஷயம்தான்.
ஒரு நாள், ஒரு பாடலில் இரண்டு வரிகளுக்கு எந்த சிந்தனையும் கிடைக்காமல் இருந்தது. அப்போது சாட் ஜிபிடி-யின் உதவியை நாடி, அதில் இந்தப் பாடல் வரிகளை அப்லோட் செய்து, அதனிடம் ஐடியாக் கேட்டேன்.

அதுவும் சில பரிந்துரைகளைக் கொடுத்தது. அதிலிருந்து ஒன்றை எடுத்து, நான் வேலைகளைக் கவனித்தேன்.
அனைவருக்குமே இப்படியான ஒரு சூழல் ஏற்படும். அதிலிருந்து விடுபடுவதும் இப்போது சுலபமாகிவிட்டது.
நாம் ஒரு கிரியேடிவ் நபராக இருப்பதனால்தான் கிரியேடராக இருக்கிறோம்,” எனக் கூறியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…