• August 5, 2025
  • NewsEditor
  • 0

கமல் நடிப்பில் வந்த காமெடி படமான வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் படம் போல நிஜ வாழ்க்கையில் வலம் வந்த போலி மருத்துவர் அசாம் மாநிலத்தில் சிக்கியுள்ளார்.

சில்சார் என்ற நகரில் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர் எனக் கூறிக்கொண்ட இவர், 50க்கும் மேற்பட்ட சிசேரியன்களைச் செய்திருப்பது தெரியவந்துள்ளது.

Gynaecology

அங்கிருக்கும் இரண்டு தனியார் மருத்துவமனைகளில் கடந்த பத்து ஆண்டுகளாக கைனகாலஜிஸ்ட்டாக பணியாற்றி வந்துள்ளார் புலோக் மலகார் என்ற அந்த நபர்.

மற்றுமொரு பிரசவத்துக்கான சிசேரியன் அறுவை சிகிச்சையை மேற்கொள்ளும் முன்னர் ஆப்பரேஷன் தியேட்டரில் வைத்தே இவரைக் கைது செய்துள்ளனர் காவல்துறையினர்.

Fake Doctor
Fake Doctor

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ள மூத்த போலீஸ் அதிகாரி நுமல் மஹத்தா, “எங்களுக்கு அவரைப் பற்றி தகவல் கிடைத்தது விசாரித்து வந்தோம். எல்லா ஆவணங்களையும் சரிபார்த்தபோது அவரது சான்றிதழ்கள் போலியானவை எனத் தெரியவந்தது. அவர் ஒரு போலி மருத்துவர், பல ஆண்டுகளாக இதைச் செய்துவந்துள்ளார்.” எனக் கூறியுள்ளார்.

அசாமில் போலி மருத்துவர்களுக்கு எதிராக தீவிரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் ஹிமந்த சர்மா தலைமையிலான அரசாங்கம், மாநில காவல்துறையுடன் நெருக்கமாக செயல்படும் ஒரு சிறப்புப் பிரிவை (போலி எதிர்ப்பு மற்றும் விஜிலன்ஸ் பிரிவு) உருவாக்கியது.

இந்த பிரிவு இதுவரையில் 10க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்துள்ளது.

மாநிலம் முழுவதும் போலி மருத்துவர்கள் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் ஈட்டும் மக்களைக் குறிவைத்து செயல்பட்டு வருகின்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *