
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தின் உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள தரலி என்ற பகுதியில் பெரும் மேகவெடிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து அங்குள்ள கீர் கங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இந்த திடீர் வெள்ளப்பெருக்கில், குடியிருப்புகள், பொதுமக்கள் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருக்கிறது. பலர் உயிரிழந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இந்நிலையில் மோடி தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார். ” உத்தரகாசியில் நடந்த இந்த துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பணிவுடன் இரங்கலைத் தெரிவிக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக நான் பிரார்த்திக்கிறேன்.
उत्तरकाशी के धराली में हुई इस त्रासदी से प्रभावित लोगों के प्रति मैं अपनी संवेदना व्यक्त करता हूं। इसके साथ ही सभी पीड़ितों की कुशलता की कामना करता हूं। मुख्यमंत्री पुष्कर धामी जी से बात कर मैंने हालात की जानकारी ली है। राज्य सरकार की निगरानी में राहत और बचाव की टीमें हरसंभव…
— Narendra Modi (@narendramodi) August 5, 2025
மாநில முதல்வர் திரு புஷ்கர் தாமி ஜியிடம் தொடர்பு கொண்டு நிலைமை குறித்து விசாரித்தேன். மாநில அரசின் மேற்பார்வையில் மீட்பு மற்றும் நிவாரண படைகள் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு உதவ அரசு எந்தவித தடையும் விதிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…