• August 5, 2025
  • NewsEditor
  • 0

பர்கர், ஃபிரைஸ்… ஆகிய வார்த்தைகளைக் கேட்டதும் நியாபகம் வரும் ஒரு சில பெயர்களில், ‘மெக்டொனால்ட்ஸ்’ஸும் ஒன்று.

இங்கே அன்லிமிடட் பர்கர்ஸ், ஃபிரைஸ் கிடைக்கிறதாம்… இது குறித்து கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

ஆம்… மெக்டொனால்ட்ஸ் சிலருக்கு மட்டும், ‘கோல்டு கார்டு’ ஒன்றைக் கொடுத்துள்ளது. இது சாதாரண அட்டை அல்ல.

இந்த அட்டையை வைத்திருப்பவர்கள் மெக்டொனால்ட்ஸில் இலவசமாக சாப்பிடும் சலுகையைப் பெறுகிறார்கள்.

வாழ்நாள் முழுவதும் இலவசம்

உலகம் முழுவதிலும் சில பிரத்யேக நபர்களுக்கு மட்டுமே இந்த கார்டு வழங்கப்பட்டுள்ளது.

அதில் முக்கியமாக குறிப்பிடப்பட வேண்டியவர் மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ்.

அவர் வைத்திருக்கும் McGold Card மூலம், அவர் உலகில் எந்த மெக்‌டொனால்ட்ஸிற்குச் சென்றாலும், அவருக்கு வேண்டியதை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம்.

சில நாட்களுக்கு முன், வைரலான வீடியோ ஒன்றில் பில் கேட்ஸ், இந்த கார்டை காட்டியிருந்தார். அதில் ‘Be our guest Bill Gates – Entitled to a complimentary meal at any McDonald’s’ என்று எழுதப்பட்டிருந்தது.

பில் கேட்ஸ்

ஒரே ஒரு இடத்தில் மட்டும்…

பில் கேட்ஸ் மட்டும் அல்ல, உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளர் வாரன் பஃபெட்டுக்கும் இந்த கார்ட் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ள McGold Card மூலம், அமெரிக்காவின் ஒமஹா நகரத்தில் உள்ள மெக்‌டொனால்ட்ஸ்களில் மட்டுமே சாப்பிட முடியும்.

அதுகுறித்து அவர், “நான் அதிகமாக வெளியூர் போகமாட்டேன், எனவே, எனக்கு இது போதுமானது” என்று கூறுகிறார்.

வேறு..?

மேலும், ஹாலிவுட் நடிகர் ராப் லோவ் மற்றும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ரெஜிஸ் பில்பினும் கடந்த காலங்களில் மெக்‌டொனால்ட்ஸிடம் இருந்து ஒருவருடம் செல்லக்கூடிய அல்லது ஒரு சில இடங்களில் மட்டுமே செயல்படும் McGold Card-ஐ பெற்றுள்ளனர்.

வாரன் பஃபெட்
வாரன் பஃபெட்

என்னென்ன வகை?

இந்தக் கார்டிலே பல வகை உண்டு.

1. எங்கே, எவ்வளவு சாப்பிட்டாலும் பணம் செலுத்த தேவையில்லை.

2. சில கார்டுகள் மூலம் வாரத்திற்கு இரண்டு முறை இலவச உணவை உண்ண முடியும்.

3. ஒரு ஆண்டிற்கான இலவச மீல்ஸ்…

இப்படி ஏகப்பட்ட வகையான கார்டுகள் உண்டு.

பொதுமக்களுக்கு இந்த ஆப்ஷன் உண்டா?

அது கொஞ்சம் சிரமம் தான். 2022-ம் ஆண்டு, ‘SZN of Sharing’ என்ற புரோமோஷன் மூலம், 12 McGold Cards-ஐ பொதுமக்களுக்கு வழங்கியது.

இந்தக் கார்டைப் பெற்றவர்கள், மூன்று பேருடன் வாரத்திற்கு இரண்டு முறை 50 ஆண்டுகளுக்கு இலவசமாக மெக்டொனால்ட்ஸில் உண்ண முடியும்.

ஆக, இந்தக் கார்டைப் பெறுவதற்கான ஆப்ஷன் எப்போதாவது தான் கிடைக்கும்.

McDonalds
McDonalds

யாருக்கு இந்தக் கார்டு?

பொதுவாக, இந்தக் கார்டு பிரபலங்கள், விசேஷ வாடிக்கையாளர்கள், சமூகத்தில் முக்கிய பங்களிப்பு அளித்த நபர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது.

இந்தக் கார்டின் நோக்கமே, உணவுக்காக அல்ல… இது ஒரு பெருமை சின்னம்.

பில் கேட்ஸ் போன்றோருக்கு இந்தக் கார்டு அதிகம் தேவைப்படாது. ஆனால், இதை அவர்களுக்குக் கொடுப்பது மூலம், மெக்டொனால்ட்ஸுக்கு ஒரு பிரபலம் அவ்வளவு தான்.

இப்படி ஒரு கார்டு உங்களுக்கு கிடைத்து, உங்களுடன் ஒருவரை அழைத்து செல்லலாம் என்றால், யாரை அழைத்து செல்வீர்கள்?

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *