
சென்னை: சேலம் தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தைத் திறந்து, 600 தொழிலாளர்களுக்கும் மீண்டும் பணி வழங்கப்பட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மாநகரம் சூரமங்கலத்தில் சுமார் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் கடந்த சில நாள்களுக்கு மின் கதவடைப்பு செய்துள்ளது. அதுமட்டுமின்றி, பணியாளர்கள் அனைவரும் தானாக பணி விலகும் சூழலை ஏற்படுத்தி நிறுவனத்தை நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. தலேமா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் இந்தத் தொழிலாளர் விரோதப் போக்கு கடுமையாக கண்டிக்கத்தக்கது.