• August 5, 2025
  • NewsEditor
  • 0

ரஷ்யா உடன் வணிகம் செய்யும் நாடுகளுக்கு அபராதம் விதித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இதற்கு இந்தியாவிற்கு அமெரிக்கா விதித்துள்ள அபராதமே நல்ல உதாரணம்.

ட்ரம்பின் இந்த அதிரடி வரிகள் குறித்து ரஷ்யா தற்போது கருத்து தெரிவித்துள்ளது.

“இது பொருளாதார காலனித்துவம்” – ரஷ்யா கடும் எதிர்ப்பு!

அமெரிக்கா பிற நாடுகள் மீது போடும் வரி குறித்து ரஷ்யாவின் செய்தி தொடர்பாளர் மரியா ஜகரோவா,

“தடைகளும், கட்டுப்பாடுகளும் தற்போதைய உலக அரசியலின் மிக முக்கிய அம்சமாக மாறிவிட்டது. இது பல நாடுகளைப் பாதிக்கிறது. இந்த உலகம் பன்முகத்தன்மையை நோக்கி நகரும்போது, அமெரிக்காவால் அதன் ஆதிக்கம் அழிவதை தாங்கி கொள்ள முடியவில்லை.

இதனால், புதிய காலனித்துவம் மூலம் பொருளாதார அழுத்தங்களைக் கொடுக்கிறது. அவை அரசியல் நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டவை ஆகும். இவை பிற நாடுகளின் சுதந்திர வெளியுறவுக் கொள்கைகளைப் பாதிக்கிறது.

ட்ரம்ப், புதின்

பிரிக்ஸ் ஆதரவு – ரஷ்யா

ரஷ்யா உடன் வணிகம் செய்யும் உலகளாவிய தெற்கு நாடுகளின் மீது வரி விதிப்பதன் மூலம் அமெரிக்கா, அந்தந்த நாடுகளின் இறையாண்மையை நேரடியாக ஆக்கிரமிக்கிறது.

மேலும், இது அவர்களுடைய உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது போன்றதாகும்.

வரி போர்கள், தடைகள் ஆகியவை வரலாற்றை மாற்ற முடியாது என்பதை வலுவாக நம்புகிறோம்.

ஒத்த அலைவரிசை உடைய நாடுகள், கூட்டாளிகள், தெற்கில் உள்ள நாடுகள், அனைத்திற்கும் மேலாக பிரிக்ஸ் என எங்களைப் பலர் ஆதாரிக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *