• August 5, 2025
  • NewsEditor
  • 0

இந்தியாவில் வசிக்கும் ஒரு ரஷ்ய பெண் தான், இந்திய ஆணைத் திருமணம் செய்து கொண்டதற்கான மூன்று காரணங்களைக் கூறி ஒரு வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

க்சேனியா சாவ்ரா என்ற ரஷ்ய பெண் இந்தியாவிற்கு ஆன்மிகப் பயிற்சிக்காக வந்திருக்கிறார். அதன் பின்னர் இந்தியாவில் தன் வருங்கால கணவரை கண்டுபிடித்து திருமணம் செய்ததாகப் பகிர்ந்திருக்கிறார்.

நான் இந்தியரை திருமண செய்ததற்கான மூன்று காரணங்கள் என்று வீடியோவாக அவர் பகிரந்துள்ளார்.

வீடியோவின் படி, ”கணவர் எப்போதும் எனக்காக சமைப்பார், எப்போதும் என்னை கவனித்துக் கொள்கிறார், என்னை நேசிக்கிறார் என்று மூன்று காரணங்களை கூறி அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உலகின் சிறந்த கணவர் என்ற கேப்ஷன் உடன் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி பலரும் இதற்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது போன்ற வெளிநாட்டு ஆண்களை அல்லது பெண்களை இந்தியர்கள் திருமணம் செய்து கொண்டு இந்தியாவில் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடுத்தக்கது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *